ரூ.16 லட்சம் லாபம்! 10 ஆயிரம் ரூபாய் போதும்! உடனே போஸ்ட் ஆபீஸ் போங்க!

by -54 views

பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக நிறைய சிறு சேமிப்பு திட்டங்களை இந்திய தபால் துறை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலையங்களில் சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு வரி விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் இருக்கின்றன. இவற்றில் சேமிப்பதற்கு உங்களிடம் சிறிய தொகை இருந்தாலே போதும். வாங்கும் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறு தொகையை எடுத்து வைத்தாலே போதும்.

தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத் திட்டங்களில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம். இத்திட்டத்தில் உங்களுக்கு 5.8 சதவீத வட்டி கிடைக்கிறது. மொத்தம் 10 ஆண்டுகளுக்கு நீங்கள் சேமிக்க வேண்டும். நீங்கள் விரும்பிய தொகையை டெபாசி செய்யலாம். நீங்கள் லட்சங்களில் லாபம் பெறவேண்டுமென்றால் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் முதலீடு செய்தாலே போதும். 5.8 சதவீத வட்டியில் 10 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.16.28 லட்சம் கிடைக்கும்.

சிலிண்டருக்கு மீண்டும் மானியம்! பொதுமக்கள் ஹேப்பி!

நீங்கள் இத்திட்டத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்ய வேண்டும். இடைவேளை விட்டால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து டெபாசிட் செய்யாமல் இருந்தால் உங்களுடைய கணக்கு மூடப்பட்டுவிடும். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ரூ.40,000க்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். அருகிலுள்ள தபால் நிலையத்திலேயே நீங்கள் ரெக்கரிங் டெபாசிட் கணக்கைத் திறக்க முடியும். தனியார் மற்றும் அரசு வங்கிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *