ரூ. 10,000 முதலீடு.. 16 லட்சம் வருமானம்.. போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

by -92 views

ஹைலைட்ஸ்:

  • பாதுகாப்பான போஸ்ட் ஆபீஸ் திட்டம்
  • 10,000 ரூபாய் முதலீட்டில் 16 லட்சம் வருமானம்

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு சில பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன. இதில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இதுபோக, நல்ல வருமானம் தரக்கூடிய பல்வேறு பாதுகாப்பான திட்டங்களும் உள்ளன.

குறிப்பாக, தபால் அலுவலக ரெகரிங் டெபாசிட் திட்டம் (Post office Recurring deposit) தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்து வருகிறது. அரசு உத்தரவாதம் கொண்ட இத்திட்டத்தில் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீடுக்கு எந்தவொரு வரமும் இல்லை.

தற்போது தபால் அலுவலக ரெகரிங் டெபாசிட் திட்டத்துக்கு 5.8% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். 10 ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பின் உங்களுக்கு சுமார் 16 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

வருமான வரித் தாக்கல் இனி ஈசி.. ஹேப்பி நியூஸ்!
இந்த வருமானத்தை பெற வேண்டுமெனில் தொடர்ந்து எல்லா மாதமும் முதலீடு செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு மாதம் விட்டுவிட்டால் கூட 1% அபராதம் செலுத்த வேண்டும். நான்கு மாதங்களுக்கு முதலீடு செய்யாவிட்டால் உங்கள் கணக்கு தானாகவே மூடப்பட்டுவிடும்.

அக்கவுண்ட் தொடங்கி ஒரு ஆண்டுக்கு பின், அக்கவுண்டில் இருக்கும் பணத்தில் 50 விழுக்காட்டை எடுத்துக்கொள்ள அனுமதிக்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *