ரிஸ்க் இல்லை.. நல்ல வருமானம்.. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி லிஸ்ட்!

by -49 views
ரிஸ்க் இல்லை.. நல்ல வருமானம்.. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி லிஸ்ட்!
ரிஸ்க் இல்லை.. நல்ல வருமானம்.. சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி லிஸ்ட்!

ஹைலைட்ஸ்:

  • தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டங்கள்
  • வட்டி விகிதங்களின் முழு பட்டியல்

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் நல்ல சாய்ஸ். நல்ல வட்டி வருமானம், பாதுகாப்பான முதலீடு, தபால் அலுவலக திட்டங்கள் என்பதால் அரசின் ஆதரவு என சிறு சேமிப்புத் திட்டங்களின் ஸ்பெஷாலிட்டி ஏராளம்.

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு, தேசிய சேமிப்பு ரெகரிங் டெபாசிட் கணக்கு (RD), தேசிய சேமிப்பு டைம் டெபாசிட் கணக்கு (TD), தேசிய சேமிப்பு மாத வருமானத் திட்டம் (MIS), சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்புநிதி (PPF), சுகன்யா சம்ரிதி திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவை சிறு சேமிப்புத் திட்டங்கள் ஆகும்.

இந்த சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதம் மாற்றப்பட்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும். இந்நிலையில், தற்போது இத்திட்டங்களுக்கு என்ன வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.

ஒரே ஆண்டில் 135% லாபம்.. வாரி வழங்கிய பங்கு இதுதான்!
* தபால் அலுவலக சேமிப்பு – 4%

* 1 ஆண்டு டைம் டெபாசிட் – 5.5%

* 2 ஆண்டு டைம் டெபாசிட் – 5.5%

* 3 ஆண்டு டைம் டெபாசிட் – 5.5%

* 5 ஆண்டு டைம் டெபாசிட் – 6.7%

* 5 ஆண்டு ரெகரிங் டெபாசிட் – 5.8%

* சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம் – 7.4%

* மாத வருமானத் திட்டம் – 6.6%

* பொது வருங்கால வைப்பு நிதி – 7.1%

* கிசான் விகாஸ் பத்திரம் – 6.9%

* சுகன்யா சம்ரிதி திட்டம் – 7.6%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *