ரயில் டிக்கெட் கேன்சல் பண்ணுனா எவ்ளோ பணம் கிடைக்கும்?

by -21 views

பேருந்து, விமானப் பயணங்களை விட ரயில் பயணங்களை பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கின்றனர். இதில் பயணக் கட்டணம் மிகவும் குறைவு என்பதோடு, உணவு, கழிப்பறை போன்ற வசதிகள் பொதுமக்களுக்கு ஏதுவாக உள்ளன. பயண நேரமும் குறைவு. இதனால் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்பதை பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.

ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு IRCTC வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் பயன்படுத்தப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதற்கான தொகை அக்கவுண்டிலிருந்து எடுக்கப்படுகிறது. ஒருவேளை ஏதேனும் காரணங்களுக்காக பயணத்தை ரத்து செய்துவிட்டால் அதற்கான முன்பதிவுக் கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. முன்பதிவு செய்த முழுத் தொகையும் ரிட்டன் வழங்கப்படாது.

புக்கிங் செய்த பெட்டி, கேன்சல் செய்யும் நேரம் போன்றவற்றைப் பொறுத்து வெவ்வேறான அளவில் ரீஃபண்ட் தொகை வழங்கப்படுகிறது. எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும் என்ற விவரம் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. அதுபற்றிய கட்டணப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ரயில் புறப்படும் நேரத்துக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் டிக்கெட் கேன்சல் செய்தால்…

ஏசி முதல் வகுப்பு – ரூ.240
ஏசி 2ஆம் வகுப்பு – ரூ.200
ஏசி 3ஆம் வகுப்பு – ரூ.180
ஸ்லீப்பர் கிளாஸ் – ரூ.120
செகேண்ட் கிளாஸ் – ரூ.60

ரயில் புறப்படுவதற்கு முன்பு 12 மணி நேரம் முதல் 48 மணி நேர இடைவெளியில் கேன்சல் செய்தால் டிக்கெட் தொகையில் 25 சதவீதப் பணம் பிடித்தம் செய்யப்படும். அதோடு ஜிஎஸ்டி சேர்த்து கழிக்கப்படும்.

12 முதல் 4 மணி நேரத்துக்கு முன்பு கேன்சல் செய்தால் 50 சதவீதப் பணம் பிடிக்கப்படும். அதேநேரம், பயணிகளுக்கான சார்ட் தயாரிக்கப்பட்ட பின்னர் கேன்சல் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. ஒருவேளை TDR பூர்த்தி செய்திருந்தால் ரீஃபண்ட் கிடைக்கும். கேன்சல் செய்யப்படாத டிக்கெட் எதற்கும் ரீஃபண்ட் கிடைக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *