மோடி ஆட்சியில் நாட்டை விட்டு ஓடும் தொழிலதிபர்கள்!

by -22 views

2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகிலிருந்து வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி போன்ற பிரச்சினைகள் தீவிரமடைந்துவிட்டதாகப் பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுவும் குறிப்பாக 2016ஆம் ஆண்டில் ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தது, 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது போன்ற நடவடிக்கைகள் இந்தியாவில் உள்ள தொழில் துறையினரைக் கடுமையாகப் பாதித்தது என்ற குற்றச்சாட்டு வலுவடைந்தது. அதன் பிறகு கொரோனா வந்த பிறகு நிலைமை இன்னும் மோசமானது.

இந்நிலையில், நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் தொழில் துறையினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக மேற்குவங்க மாநில நிதியமைச்சரான அமித் மித்ரா குற்றஞ்சாட்டியுள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 35,000க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர் இந்தியாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமித் மித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Gold rate: முரட்டுத் தனமாக உயரும் தங்கம் விலை!

2014 முதல் 2018 வரை மொத்தம் 23,000 பேர் இந்தியாவை விட்டு வெளியேறியதாக மோர்கன் ஸ்டான்லி ஆய்வறிக்கை கூறுகிறது. சர்வதேச அளவில் பார்க்கும்போது இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 2019ஆம் ஆண்டில் 7,000 பேரும், 2020ஆம் ஆண்டில் 5,000 பேரும் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக ’சர்வதேச சொத்து இடம்பெயர்வு அறிக்கை 2020’ கூறுகிறது. 2020ஆம் ஆண்டில் பட்டியலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருந்தன. இந்தப் புள்ளி விவரங்களைச் சுட்டிக் காட்டியுள்ள அமித் மித்ரா பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *