முரட்டு லாபத்தில் HDFC வங்கி.. பங்குதாரர்களுக்கு குட் நியூஸ்!

by -19 views

ஹைலைட்ஸ்:

  • எச்டிஎஃப்சி வங்கியின் செப்டம்பர் காலாண்டு வருவாய்
  • எச்டிஎஃப்சி வங்கி நிகர லாபம் 18% உயர்வு

எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) தனது இரண்டாம் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கியின் நிகவர லாபம் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது.

செப்டம்பர் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி 9,096 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி 7,703 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது.

கடந்த செப்டம்பர் காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி 41,436.36 கோடி ரூபாய் ஒட்டுமொத்த வருமானம் ஈட்டியது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 38,438.47 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

தப்பான அக்கவுண்டுக்கு பணம் அனுப்பிட்டிங்களா? பணத்தை மீட்பது எப்படி?
எச்டிஎஃப்சி வங்கியின் காலாண்டு வருமான விவரங்கள் இன்று வெளியாகும் என தகவல் வெளியானது. மேலும், எச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் 18 விழுக்காடு உயரும் என ஏற்கெனவே சில மதிப்பீடுகள் வெளியாகி எதிர்பார்ப்புகள் அதிகரித்தது.

இந்நிலையில், எதிர்பார்ப்புக்கு ஏற்ப எச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் 18 விழுக்காடு உயர்ந்துள்ளது. மேலும், அக்டோபர் 18ஆம் தேதி பங்குச் சந்தை மீண்டும் திறக்கப்படும்போது எச்டிஎஃப்சி வங்கி பங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *