முதியோர்களுக்கான சிறந்த திட்டம்! கடைசிக் காலத்தில் உதவும்!

by -25 views

நம்மில் பலருக்கு வயதான பின்னர் தங்களைக் குழந்தைகள் பார்த்துக்கொள்வார்களா, கடைசிக் காலத்தில் எப்படி வாழ்க்கையை ஓட்டுவது போன்ற பயம் இருக்கும். கடைசிக் காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்காமல் தங்களது செலவுகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதேனும் நிதி ஆதாரம் இருந்தால் நல்லது. அதற்காகவே நிறைய பென்சன் திட்டங்களும் சேமிப்புத் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமாகும். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத் திட்டங்களில் இது பிரபலமான ஒரு திட்டமாகும். வங்கிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

அருகிலுள்ள தபால் நிலையத்திலேயே நீங்கள் இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். வங்கிகளைப் பொறுத்தவரையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவீதமாக உள்ளது.

55 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒரு நபருக்கு 5 வருட காலத்திற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் திறக்கப்படலாம். ஆனால் மொத்த வரம்பு ரூ.15 லட்சமாக இருக்க வேண்டும். இந்தக் கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகு கணக்கை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். ஒரு வருட நீட்டிப்பு காலாவதியான பிறகு இந்தக் கணக்கை எந்த நேரத்திலும் மூட முடியும். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் ஈட்டப்பட்ட வட்டி முழுமையாக வரி விதிக்கப்படக்கூடியது என்பது கூடுதல் அம்சமாகும்.

Gold rate: அடடே… தங்கம் விலை இவ்ளோ குறைஞ்சிருக்கே!

கொரோனா பாதிப்பால் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்காலம் மீதான அச்சம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் இணைந்து இறுதிக் காலத்தில் பண நெருக்கடி இல்லாத வாழ்க்கையை வாழ நினைத்தால் இத்திட்டத்தில் இணையலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *