முதல் நாளே சரிவு.. பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிருப்தி!

by -44 views
முதல் நாளே சரிவு.. பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிருப்தி!
முதல் நாளே சரிவு.. பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிருப்தி!

ஹைலைட்ஸ்:

  • முதல் நாளே பேடிஎம் பங்கு சரிவு
  • முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தி

பேடிஎம் ஐபிஓ அண்மையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து பங்குச் சந்தையில் பேடிஎம் பங்குகள் இன்று பட்டியலிடப்பட்டன. இந்திய கார்ப்பரேட் வரலாற்றிலேயே பேடிஎம் ஐபிஓ மிகப்பெரியது. ஆக, முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், ஐபிஓ விலையை காட்டிலும் 9% குறைந்த விலைக்கு பங்குச் சந்தையில் பட்டியலாகின பேடிஎம் பங்குகள். இன்று பங்கு வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பேடிஎம் பங்கு 20 விழுக்காடுக்கு மேல் சரிந்தது. தற்போது பேடிஎம் பங்கு சுமார் 24% சரிந்துள்ளது.

பேடிஎம் பங்கின் ஐபிஓ விலை 2,150 ரூபாய். ஆனால், இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் பேடிஎம் பங்கு விலை 20% மேல் சரிந்து 1,645 ரூபாயாக குறைந்தது. இந்த சரிவு பேடிஎம் ஐபிஓவில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

IPO Alert: கோ ஃபேஷன் ஐபிஓ இன்று தொடக்கம்.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
ஏற்கெனவே பேடிஎம் பங்குகள் லிஸ்டிங்கின்போது எக்ஸிட் ஆகும்படி பல்வேறு நிபுனர்கள் வலியுறுத்தினர். ஏனெனில், பேடிஎம் நிறுவனத்தின் அதீத மதிப்புகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருக்கின்றன. ஏனெனில், பேடிஎம் நிறுவனத்தின் மார்க்கெட் கேப் 1.26 லட்சம் கோடி ரூபாய். ஆனால், பேடிஎம் இன்னும் லாபகரமான நிறுவனமாக இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *