முதலீடு செய்யும்போது இந்த தப்பை மட்டும் பண்ணாதிங்க!

by -50 views

ஹைலைட்ஸ்:

  • முதலீட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள்
  • நீங்கள் கண்டிப்பா தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்

எல்லோருக்குமே தங்களது பணத்தை முதலீடு செய்து பெருக்க வேண்டுமென்கிற நோக்கம் உண்டு. ஆனால், முதலீடு செய்ய விரும்புவோர் பல்வேறு தவறுகளை தவிர்க்க வேண்டும். இதில் முக்கியமானது என்னவெனில், முதலீடு செய்யும்போது எமோஷன்களை நிச்சயம் ஒதுக்கி வைக்க வேண்டும்.

முதலீடுகளில் எமோஷன்களை பொறுத்தவரை பேராசை, பதற்றம் போன்றவற்றை கண்டிப்பாக ஒதுக்கி வைப்பதே பாதுகாப்பானது. எமோஷன்களுக்கு பதிலாக லாஜிக் அடிப்படையில் முதலீடு செய்வதே லாபம் தரும். முதலீடு செய்யும்போது எமோஷன்களை தவிர்ப்பது எப்படி?

நீண்டகால முதலீடு

எமோஷன்களை தவிர்க்க சிறந்த வழி நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வதுதான். நீண்டகால அடைப்படையில் முதலீடு செய்யும்போது பதற்றம், பேராசை போன்றவற்றை தவிர்ப்பது மட்டுமல்லாமல், நல்ல வருமானமும் கிடைக்கும்.

பெட்ரோல், டீசல் விலை தள்ளுபடி.. இந்த ஒரு கார்டு இருந்தால் போதும்!
பலதரப்பட்ட முதலீடு

ஒரே சொத்தில் அல்லது திட்டத்தில் முதலீடு செய்வதால் எமோஷன்கள் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க வேண்டுமெனில், உங்கள் போர்ட்போலியோவை விரிவுபடுத்த வேண்டும்.

கூட்ட மனநிலை

மார்க்கெட் நகர்வுகளை ஆய்வு செய்து முடிவெடுக்காமல், ஆட்டுமந்தை போல எல்லோரும் என்ன செய்கிறார்களோ அதையே நாமும் செய்வது ஆபத்தானது. ஒருவர் அவர் மேற்கொள்ளும் முடிவு அவருக்கு சாதகமாக அமையலாம். ஆனால், அதே முடிவு நமக்கு சாதகமாக அமைய வேண்டுமென உத்தரவாதம் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *