மீனவப் பெண்களுக்கு வேலை: மத்திய அமைச்சர் தகவல்!

by -58 views

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருந்த நிலையில், இந்த மாபெரும் பூங்காவை அமைப்பதற்கான பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அமையவுள்ள இந்த கடற்பாசி பூங்கா மீனவப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என்று மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல் மீனவக் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு சிறந்த வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வழிபாடு செய்துவிட்டு அங்கு புனரமைக்கப்பட்ட ஆதிசங்கரர் நினைவிடத்தையும் அவரது முழு உருவ சிலையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியைக் கண்டுகழித்த அமைச்சர் எல்.முருகன், அதன் பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகழித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கடற்பாசி பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

Gold rate: கொடூரமாக உயர்ந்த தங்கம் விலை!!

மேலும் பேசிய அவர், ”இந்தப் பூங்காவை எந்த இடத்தில் அமைப்பது என்று ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்கா மூலம் மீனவப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்” என்றார். இதன் பிறகு அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கான மானியத்தை உயர்த்தி வழங்குமாறு மீனவச் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக கொச்சி படகு கட்டும் தளத்தில் அறிக்கை கேட்டுள்ளதாகவும், அதன்பிறகு தொகை உயர்த்தி வழங்கப்படும் எனவும் அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *