மாருதி சுசூகி நிறுவனத்துக்கே இந்த நிலைமையா.. பங்குதாரர்கள் அதிர்ச்சி!

by -29 views

ஹைலைட்ஸ்:

  • மாருதி சுசூஇயின் லாபம் பயங்கர சரிவு
  • லாபம் சரிவுக்கான கரணங்கள் இவைதான்

இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசூகி செப்டம்பர் காலாண்டுக்கான வருமான விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மாருதி சுசூகியின் நிகர லாபம் 65% சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் மாருதி சுசூகியின் நிகர லாபம் 1,371 கோடி ரூபாயாக இருந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில் 475 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபம் ஈட்டியுள்ளது.

உள்ளீட்டுப் பொருட்களின் விலை உயர்வு, மின்னணு பாகங்கள் பற்றாக்குறையால் விற்பனை சரிவு ஆகிய காரணங்களால் லாபம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

Bank Holidays: நவம்பர் – இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது!
கடந்த சில மாதங்களாக கார் உற்பத்திக்கு தேவையான ஸ்டீல், அலுமினியம், காப்பர், உலோகங்கள் போன்ற உள்ளீட்டுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இதனால் மாருதி சுசூகி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தின.

இதுமட்டுமல்லாமல், செமிகண்டக்டர் சிப்களுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கார் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. ஏராளமான வாடிக்கையாளர்கள் கார் டெலிவரி பெற நீண்ட நாட்களுக்கு காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. இந்த காரணங்களால் லாபம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *