மாதம் ரூ.10,000 பென்சன்… மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

by -22 views

உங்களது ஓய்வுக் காலத்தில் நெருக்கடியில்லாத வாழ்க்கை வாழ கைவசம் போதுமான பணம் இருப்பது அவசியமாகும். அதற்கு பென்சன் தொகை உதவியாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகை வந்துகொண்டிருந்தால் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுத்து இப்போதே நீங்கள் சேமிக்கத் தொடங்கவேண்டும். அதற்கு அடல் பென்சன் யோஜனா திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாய் வரையில் பென்சன் வாங்கலாம்.

2015ஆம் ஆண்டில் இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன் கிடைத்தது. ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் இணையலாம். 18 முதல் 40 வயது வரையுள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் இணைந்து பென்சன் வாங்கலாம். வங்கி அல்லது தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருக்க வேண்டும். 60 ஆண்டுகள் கழித்து பென்சன் தொகை வந்துகொண்டே இருக்கும்.

ஆதாரில் மொபைல் நம்பர் மாத்தணுமா? ஈசி வழி!
இத்திட்டத்தில் குறைந்தது 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும். ஆதார் நம்பர், மொபைல் நம்பர் போன்றவை கட்டாயம். 18 வயதில் நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கினால் ஒவ்வொரு மாதமும் 210 ரூபாய் பென்சன் செலுத்த வேண்டும். திருமணம் ஆன கணவன் – மனைவி இருவரும் இத்திட்டத்தில் இணைந்து 10,000 ரூபாய் வரை பென்சன் வாங்கலாம். கணவன் – மனைவி இருவரும் 30 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ.577 பிரீமியம் செலுத்த வேண்டும். அடல் பென்சன் திட்டத்தில் ரூ.1.5 லட்சம் வரையில் வரிச் சலுகையும் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *