மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டம்… கால அவகாசம் நீட்டிப்பு!

by -65 views
மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டம்… கால அவகாசம் நீட்டிப்பு!
மத்திய அரசின் வேலைவாய்ப்பு திட்டம்… கால அவகாசம் நீட்டிப்பு!

சென்ற ஆண்டில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், நாட்டு மக்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டம்.

இத்திட்டத்தின் கீழ் கொரோனா மீட்பு காலகட்டத்தில் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. 2020 அக்டோபர் 1ஆம் தேதிமுதல் 2021 ஜூன் 30ஆம் தேதி வரை நியமிக்கப்படும் புதிய ஊழியர்களுக்கு 2 ஆண்டு காலத்துக்கு இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு மானியம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல, 1000 பேர் வரை வேலை பார்க்கும் நிறுவனத்தில் புதிய ஊழியர்களுக்கான சம்பளத்தில் ஊழியர்களின் பங்களிப்பில் 24 சதவீத பங்களிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் மத்திய அரசு 2 ஆண்டுகளுக்குச் செலுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்னும் 5 நாள்தான் இருக்கு!!
இத்திட்டத்தில் இணைவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்துவிட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பிஎஃப் அமைப்புடன் பதிவு செய்துள்ள நிறுவனத்தில் புதிதாக வேலையில் சேரும் தொழிலாளர்களுக்கும், அவர்களை வேலையில் சேர்க்கும் நிறுவனங்களுக்கும் அரசின் சலுகை கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *