போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம்.. ரிஸ்க் இல்லாத வருமானம்!

by -45 views
போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம்.. ரிஸ்க் இல்லாத வருமானம்!
போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம்.. ரிஸ்க் இல்லாத வருமானம்!

ஹைலைட்ஸ்:

  • போஸ்ட் ஆபீஸ் மாத வருமானத் திட்டம்
  • வட்டி விகிதம் உள்ளிட்ட தகவல்கள்

ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் அலுவலக திட்டங்கள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். பாதுகாப்பான முதலீடு, நல்ல வருமானம், அரசின் ஆதரவு என தபால் அலுவலக திட்டங்களில் முதலீடு செய்ய காரணங்கள் ஏராளம்.

குறிப்பாக, கிராமப்புற மக்களிடையே தபால் அலுவலக திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், தபால் அலுவலக மாத வருமானத் திட்டம் (Post Office) ஒரே சமயத்தில் சேமிக்கவும், முதலீடு செய்யவும் உதவுகிறது. அதாவது, இத்திட்டத்தில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, பின்னர் மாத வருமானமாக பெற்றுக்கொள்ளலாம்.

அருகில் உள்ள தபால் அலுவலகத்திலேயே மாத வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்துக்கு ஐந்து ஆண்டு லாக் – இன் காலம் உண்டு. அதாவது இத்திட்டத்தில் முதலீடு செய்த ஐந்து ஆண்டுகளுக்குள் பணத்தை எடுக்க முடியாது.

பென்சன் தொகை உயர்வு.. அதுவும் இந்த மாதமே.. ஹேப்பி நியூஸ்!
இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். ஆகவே, எளிய மக்கள் மற்றும் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஏற்ற முதலீடாகவும் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தில் முதலீடு செய்வோர் வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி கீழ் வரிச் சலுகையும் பெறலாம்.

இத்திட்டத்தில் ஒரு நபர் அதிகபட்சம் 4.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். கூட்டுக் கணக்கில் (Joint Account) 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். தற்போது தபால் அலுவலக மாத வருமானத் திட்டத்துக்கு ஆண்டுக்கு 6.6% வட்டி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *