பொருளாதார வளர்ச்சி… குறையும் நம்பிக்கை!

by -25 views

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு 2021-22 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10 சதவீதம் மட்டுமே வளரும் என்று தெரிவித்துள்ளது. ஏற்றுமதித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உள்நாட்டு நுகர்வுத் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டிருந்த மதிப்பீட்டறிக்கையில், இந்தியா 11 சதவீத வளர்ச்சியைச் சந்திக்கும் என்று கூறியிருந்தது.

2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் உற்பத்தித் துறை முற்றிலும் முடங்கியது. ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. கட்டுமானம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் முடங்கின. இதனால் இந்தியப் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. பின்னர் கொரோனா தடுப்பூசித் திட்டம் சூடுபிடித்ததால் பொருளாதார வளர்ச்சியும் மேம்படத் தொடங்கியது.

பொருளாதார வளர்ச்சி… மத்திய அரசு சொன்ன நல்ல செய்தி!
ஆனால், தற்போது கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீடுகளை ஆய்வு நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. தற்போது ஆசிய மேம்பாட்டு வங்கியும் தனது மதிப்பீட்டைக் குறைத்துள்ளது. 2022-23 நிதியாண்டில் 7.5 சதவீத வளர்ச்சி இருக்கும் எனவும் ஆசிய மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *