பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. ஹேப்பி நியூஸ்!

by -48 views
பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. ஹேப்பி நியூஸ்!
பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. ஹேப்பி நியூஸ்!

ஹைலைட்ஸ்:

  • பொதுத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
  • விரைவில் வெளியாகும் அறிவிப்பு

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, சுமார் 60,000 ஊழியர்களுக்கு ஊதியம் 15% உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டிலேயே பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், அடுத்த சில தினங்களிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று நிதியமைச்சக வட்டாரத்தில் கூறுகின்றனர்.

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் உயர்த்தப்படுகிறது. ஆனால், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின் ஊதிய உயர்வு இன்னும் நிலுவையிலேயே உள்ளது. ஆகவே, ஊதியம் உயர்த்தப்பட வேண்டுமென ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பென்சன் தொகை உயர்வு.. இன்று முக்கிய அறிவிப்பு!
பொதுத்துறை வங்கிகளும், எல்ஐசி நிறுவனமும் ஏற்கெனவே ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துவிட்டன. ஆனால், பொதுத்துறை காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் இன்னும் ஊதிய உயர்வு நிலுவையில் இருப்பதால், ஊழியர்கள் தரப்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.

பொதுத்துறை காப்பீட்டு துறையில் the National Insurance, the New India Assurance, the Oriental Insurance and the United India Insurance ஆகிய அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. இந்நிலையில், இந்நிறுவனங்களின் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *