பைக் வாங்கினால் 4000 ரூபாய் கிடைக்கும்! தீபாவளி ஆஃபர்!

by -24 views

பண்டிகை சீசன் சமயத்தில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவிப்பது வழக்கம். இச்சலுகைகளின் குறைந்த விலைக்கு பைக், கார் போன்ற வாகனங்களை வாங்கலாம்.

இதுமட்டுமல்லாமல் ஈசி ஈஎம்ஐ, கேஷ் பேக் போன்ற பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பண்டிகை சீசனை முன்னிட்டு சிறப்புச் சலுகை ஒன்றை யமஹா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, யமஹா நிறுவனம் கேஷ் பேக் சலுகையை அறிவித்துள்ளது. இச்சலுகையின் கீழ், யமஹா ஸ்கூட்டர்களை வாங்கினால் வாடிக்கையாளர்களுக்கு 4,000 ரூபாய் வரையில் கேஷ் பேக் கிடைக்கும். யமஹா நிறுவனத்தின் அனைத்து பைக்குகளுக்கும் இது பொருந்தாது. 125 சிசி வாகனங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

Fascino 125 Fi, Ray ZR 125 Fi மற்றும் Ray ZR Street Rally 125 Fi போன்ற வாகனங்களுக்கு கேஷ் பேக் வழங்கப்படும். இச்சலுகை அக்டோபர் மாத இறுதி வரையில் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர்தான் Fascino Hybrid மற்றும் Ray ZR 125 Hybrid ஸ்கூட்டர்கள் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இவற்றின் விலை ரூ.70,000 முதல் ரூ.85,000 வரை உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *