பேஷன் துறையில் கலக்கும் கோடீஸ்வரர் பெர்னார்டின் வெற்றிக் கதை!

by -33 views
பேஷன் துறையில் கலக்கும் கோடீஸ்வரர் பெர்னார்டின் வெற்றிக் கதை!
பேஷன் துறையில் கலக்கும் கோடீஸ்வரர் பெர்னார்டின் வெற்றிக் கதை!

1949அம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ரோபெக்ஸ் என்ற இடத்தில் பெர்னார்ட் அர்னால்டு பிறந்தார். இவரது தந்தை ஜீன் லியான் அர்னால்டு ஒரு உற்பத்தியாளர். இவருக்கு சொந்தமாக ஒரு சிவில் எஞ்சினியரிங் நிறுவனம் இருந்தது. பெர்னார்ட் தனது பள்ளிப் படிப்பை வாண்டர் மீர்ச் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை எக்கோல் பாலிதேனிக் கல்வி நிறுவனத்திலும் முடித்தார்.

கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்த பிறகு தனது தந்தைக்கு உதவியாக அவரது நிறுவனத்தில் சேர்ந்தார். அந்த நிறுவனத்தை பிரித்துவிட்டு ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யுமாறு தனது தந்தைக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி ரியல் எஸ்டேட் துறையில் வெற்றிகரமாக முதலீடு செய்யத் தொடங்கினர். அந்த நிறுவனத்தில் பெர்னார்ட் வேகமாக முன்னேற்றம் கண்டார். 1979ஆம் ஆண்டில் அவரது தந்தை இறந்தபிறகே அவரே நிறுவனத்தின் தலைவரானார்.

1

இப்படியே நாட்கள் சென்றன. 1981ஆம் ஆண்டில் இவரது குடும்பம் அமெரிக்காவுக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அங்கும் ரியல் எஸ்டேட் துறையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். முதலீடுகள் பெருகின. வருமானம் அதிகரித்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து சொந்த நாட்டுக்குத் திரும்பிய பெர்னார்ட், அப்போது ஜவுளித் துறையில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார். திவாலான ஒரு ஜவுளி நிறுவனத்தை ஆண்டனி பெர்ன்ஹெம் என்பவருடன் இணைந்து வாங்கினார்.

அந்த நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துவிட்டு டியார் என்ற பிராண்டை மட்டும் வைத்துக் கொண்டார். அதன் பிறகு 1987ஆம் ஆண்டில் LVMH (Louis Vuitton) என்ற நிறுவனத்தின் பங்குகளை பெர்னார்ட் வாங்கத் தொடங்கினார். அந்த ஆண்டு முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் குவித்தார். 1989ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் 44 சதவீதப் பங்குகளை பெர்னார்டு கைவசம் வைத்திருந்தார்.

2

அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பெர்னார்ட் அந்த நிறுவனத்தின் பழைய ஊழியர்களையெல்லாம் நீக்கிவிட்டு துடிப்புமிக்க இளைஞர்களைப் பணியில் அமர்த்தினார். அதன் பின்னர் மார்க் ஜேகப்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களை வாங்கினார். 2020ஆம் ஆண்டு கணக்கின்படி பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. இவர்தான் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர். முதல் இரண்டு இடங்களில் எலான் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் உள்ளனர்.

3

பெர்னார்ட் அர்னால்டின் LVMH நிறுவனம்தான் அழகுசாதனப் பொருட்கள் துறையில் உலகின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. 1973ஆம் ஆண்டில் ஆன்னி டேவவ்ரின் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பெர்னார்டுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. 1990ஆம் ஆண்டில் விவகாரத்து பெற்று அடுத்த ஆண்டிலேயே ஹெலன் மெர்சியர் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இவரது ஐந்து பிள்ளைகளுமே பெர்னார்ட் நிறுவனத்தில் உயர் பதவிகளில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *