பேலன்ஸ் செக் பண்றது ஈசி… ஒரு மிஸ்டு கால் போதும்!

by -30 views

நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய, மாநில அரசின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.

உங்ககிட்ட 50 பைசா காயின் இருக்கா? 1 லட்சம் கிடைக்கும்!
இந்த ஜன் தன் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்று பார்ப்பதற்கு வங்கிக் கிளைக்குச் சென்று கேட்கத் தேவையில்லை. இண்டர்நெட் செலவழித்து ஆன்லைன் வெப்சைட், மொபைல் ஆப் போன்றவற்றிலும் பார்க்கத் தேவையில்லை. ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்.

நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ஜன் தன் கணக்கு தொடங்கியிருந்தால் உங்களது மொபைல் நம்பரில் இருந்து 18004253800 அல்லது 1800112211 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதற்கு உங்களது மொபைல் நம்பர் ஜன் தன் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வேறு நம்பரிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தால் பேலன்ஸ் பார்க்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *