பென்சன் திட்டம் முதலீடு.. இனி ரொம்ப ஈசி!

by -28 views

ஹைலைட்ஸ்:

  • மொபைலிலேயே பென்சன் திட்ட முதலீடு
  • வெறும் 5 நிமிடங்கள் மட்டும் போதும்

கொடாக் மகிந்த்ரா வங்கி தனது மொபைல் ஆப்பில் தேசிய பென்சன் திட்டத்தை (NPS – National Pension System) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் அனைவரும் இனி மொபைல் ஆப்பிலேயே பென்சன் திட்ட கணக்குகளை தொடங்கி செயல்படுத்தலாம் என கொடாக் மகிந்த்ரா வங்கி தெரிவித்துள்ளது.

Android மற்றும் iOS பயனர்கள் அனைவருமே கொடாக் மகிந்த்ரா வங்கியின் ஆப்பை பயன்படுத்தலாம். உடனடியாக சில நிமிடங்களிலேயே பென்சன் திட்டக் கணக்கை தொடங்கிவிடலாம் என்று கொடாக் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பென்சன் திட்ட கணக்கு வைத்திருப்போரும் இந்த ஆப் மூலம் முதலீடு செய்யலாம்.

இந்த ஆப்பில், பென்சன் திட்ட கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ள மொத்த தொகை, மொத்த லாபம்/மொத்த இழப்பு, கிடைத்துள்ள வருமானம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ளலாம். கொடாக் மகிந்த்ரா வங்கியின் மொபைல் ஆப்பில் வெறும் ஐந்து ஸ்டெப்களில் பென்சன் திட்ட கணக்கை தொடங்கிவிடலாம்.

உங்ககிட்ட ஒரு ரூபாய் இருக்கா? 45000 ரூபாய் கிடைக்கும்!
1. ஆப்பில் உள்ள ‘Invest’ பிரிவில் ‘National Pension System’ ஆப்ஷனை கிளிக் செய்து ‘Apply Now’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

2. முதலீட்டுத் தொகை, காலம், பென்சன் ஃபண்ட் மேனேஜர் ஆகிய விவரங்களை பதிவிடவும்

3. தனிநபர் விவரங்களை பதிவிட்டு நாமினி பெயரை சேர்க்கவும்

4. பான் கார்டு மற்றும் போட்டோ அப்லோடு செய்யவும்

5. Confirm செய்து பரிவர்த்தனையை முடித்தால் தேசிய பென்சன் திட்ட கணக்கு உடனடியாக தொடங்கப்பட்டுவிடும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *