பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்.. மீண்டும் களத்தில் இறந்த சூப்பர் வாய்ப்பு!

by -20 views

ஹைலைட்ஸ்:

  • பெண்கள் மீண்டும் வேலையில் இணைய சூப்பர் வாய்ப்பு
  • விப்ரோ நிறுவனத்தின் அட்டகாசமான அறிவிப்பு

பெண்கள் பயனடையும் வகையில் ஒரு அட்டகாசமான திட்டத்தை இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Begin Again’ என்னும் இத்திட்டத்தின் மூலம், ஏற்கெனவே வேலையை விட்ட பெண்கள் மீண்டும் இணைந்துகொள்ளலாம்.

6 மாதம் முதல் ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேல் பிரேக் எடுத்துக்கொண்ட பெண் ஊழியர்கல் Begin Again திட்டத்தின் கீழ் மீண்டும் வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐடி துறையில் டிமாண்ட் உயர்ந்துள்ள நிலையில் பெண் ஊழியர்கள் மீண்டும் தங்களது திறமைகளை பயன்படுத்த விப்ரோ வழிவகை செய்துள்ளது.

ஊழியர்களுக்கு கட்டமைப்பு ரீதியாக பயிற்சி வழங்குவது, அனைவருக்குமான ஒருங்கிணைந்த அமைப்பு, கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிப்பதற்கான திட்டம் ஆகியவை இந்த Begin Again திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

ஆன்லைன் பண மோசடி… திரும்பப் பெறுவது எப்படி?
தற்போது விப்ரோ நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேவையான திறமைகள், தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் பெண்கள் விண்ணப்பித்து வேலைவாய்ப்பை பெறலாம். செப்டம்பர் காலாண்டில் 8,100 ஃப்ரஷர்களுக்கு விப்ரோ வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *