பெட்ரோல் விலை இன்னும் உயரும்… பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்!

by -29 views

இந்தியாவில் தங்கம் விலை உயர்வை விட பெட்ரோல் விலை உயர்வுதான் பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. பொதுமக்கள் இதற்காகவே தினமும் நூற்றுக் கணக்கில் செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்தியாவின் மற்ற நகரங்களில் பெட்ரோல் விலை அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்து நிற்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று பொதுமக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், பெட்ரோல் விலையேற்றம் என்பது அடுத்து வரும் காலங்களில் தொடர்ந்து நீடிக்கும் என்றே தெரிகிறது. ஏனெனில், சர்வதேசச் சந்தையில் கச்சா விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் – டீசல் விலையும் உயர்ந்து கொண்டேதான் இருக்கும். இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை நிர்ணயக் குழுவில் இருக்கும் அதிகாரி ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்துக் கூறுகையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் இருப்பதால் இந்தியாவிலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை: சதம் அடித்து சின்னதா ஒரு ரெஸ்ட்!
சில மாதங்களுக்கு முன்னர் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 72 டாலராக இருந்தது. ஆனால் இப்போது 79 டாலராக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் விலையேற்றத்தின் சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்துவதாக உள்ளது. முன்னதாக ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் கச்சா எண்ணெய் விலையேற்றம் இல்லாததால் பெட்ரோலியப் பொருட்களின் விலையிலும் பெரிய உயர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது விலையேற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெட்ரோல் – டீசல் மட்டுமல்லாமல், சமையல் எரிவாயு விலையும் உயர்த்தப்படுவதால் பொதுமக்களுக்கு அதிக சுமை ஏற்பட்டுள்ளது.r

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *