பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு

by -33 views
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு

சேலம்: பெட்ரோல் விலை 23 நாட்களுக்கு பிறகு கடந்த 28ம் தேதி 19 காசு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்றும் பெட்ரோல் விலை 21 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ நெருங்கி வருகிறது. இதேபோல், டீசல் விலை கடந்த 7 நாளில் டீசல் விலை ரூ.1.19 அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.99.15க்கு விற்கப்பட்ட நிலையில் ேநற்று 21 காசு அதிகரித்து ரூ.99.36க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் டீசல் ரூ.94.17க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று 28 காசு உயர்ந்து ரூ.94.45க்கு விற்கப்பட்டது. சேலத்தில் பெட்ரோல் ரூ.99.68க்கும், டீசல் ரூ.94.80க்கும் விற்கப்பட்டது. மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் காய்கறி, மளிகை பொருட்கள் விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *