பெட்ரோல், டீசல் விலை தள்ளுபடி.. இந்த ஒரு கார்டு இருந்தால் போதும்!

by -28 views

ஹைலைட்ஸ்:

  • பெட்ரோல், டீசல் செலவை குறைக்கலாம்
  • எஸ்பிஐ கார்டு வழங்கும் சூப்பர் சலுகை

பாரத் பெட்ரோலியம் நிறுவனமும், இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கியும் இணைந்து கிரெடிட் கார்டு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. இதுவொரு contactless கிரெடிட் கார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்போர் பெட்ரோல், டீசல் செலவுகளை சேமிக்க முடியும். இதுபோக பல்வேறு துறைகளில் சலுகைகள் மற்றும் பரிசுகளை பெற முடியும் என தேசிய பரிவர்த்தனைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த கார்டை பயன்படுத்துவோர் ரிவார்டுகள் மூலம் பெட்ரோல், டீசல் செலவை குறைக்கலாம். இதுபோக, மளிகைப் பொருள், உணவகங்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், சினிமா தியேட்டர் என பல்வேறு இடங்களில் சலுகைகளை பெறலாம். இதன் மூலம் செலவை குறைத்து பணத்தை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது.

வீடு வாங்குவோருக்கு அடித்த ஜாக்பாட்.. வரிசைகட்டும் சலுகைகள்!
பயனர்கள் இந்த கார்டை பயன்படுத்தி பெட்ரோல், டீசலுக்கு செலவிடும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 13X ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும். மேலும், 4000 ரூபாய் வரையில் பெட்ரோல், டீசலுக்கு செலவிடும்போது கூடுதல் கட்டணத்தில் (fuel surcharge) 1 விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும்.

இதுபோக, மளிகைப் பொருள், சினிமா, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், உணவகங்களில் செலவிடும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 5X ரிவார்டு புள்ளிகள் கிடைக்கும். பெட்ரோல், டீசல் அல்லாத மற்ற செலவுகளை பொறுத்தவரை ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ஒரு ரிவார்டு புள்ளி கிடைக்கிறது.

பெட்ரோல் டீசல் மட்டுமல்லாமல் மற்ற ஷாப்பிங் செலவுகளிலும் சேமிக்கும் வகையில் இந்த கிரெடிட் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தேசிய பரிவர்த்தனைக் கழகத்தின் தலைமை அதிகாரி பிரவீணா ராய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *