பெட்ரோல் டீசல் விலையில் இருந்து விடுதலை? அரசின் அதிரடி முடிவு!

by -18 views

ஹைலைட்ஸ்:

  • ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசல்
  • மத்திய அரசு குழு பரிசீலனை

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கெனவே கொரோனா நெருக்கடியால் மக்கள் அவதிப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டுமென பலரும் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது பெட்ரோல், டீசல் வாட் வரி முறையில் உள்ளது. இதை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவந்தால் நிச்சயமாக பெட்ரோல், டீசல் விலை குறையும் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்நிலையில், பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது குறித்து ஜிஎஸ்டி தொடர்பான மத்திய அரசு குழு பரிசீலித்து வருவதாக Mint ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான இந்தக் குழு, பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கவுள்ளது.

உங்கள் பணத்துக்கு ஆபத்து.. இதை செய்யாதிங்க.. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
இக்குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர். குழுவில் நான்கில் மூன்று பகுதி ஆதரவு இருந்தால் மட்டுமே எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ள முடியும். இந்தக் குழு செப்டம்பர் 17ஆம் தேதி கூடி ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *