பிட்காயினுக்கு வரி கிடையாது! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

by -49 views
பிட்காயினுக்கு வரி கிடையாது! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!
பிட்காயினுக்கு வரி கிடையாது! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!

எல்சால்வடார் நாட்டின் ஜனாதிபதி நயீப் புக்கேல் பல்வேறு விதங்களில் நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் பிட்காயினை பயன்படுத்தி வருகிறார். கிரிப்டோ கரன்சி பற்றிய அவருடைய புரிதலும் அவரின் அணுகுமுறையும் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக அளவில் அனைவருடைய கவனத்தையும் பெற்று வருகிறது.

எல்சால்வடார்தான் உலகின் முதல் பிட்காயினுக்கான நகரமாக இருக்க வேண்டும் என்பதில் ஜனாதிபதி நயீப் புக்கேல் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார். அதற்காக அவர் பிட்காயினை உருவாக்க எரிமலை புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி பிட்காயின் மைனிங்கை உருவாக்கி வருகிறார். ஆரம்ப கட்டத்தில் சில ஆதரவு ஆவணங்களைப் பெற்ற பின்னரே பிட்காயினுக்கான நிதி வழங்கப்பட்டு வந்தது. அதன்பின் மத்திய அமெரிக்காவில் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யத் திட்டமிடுள்ளாதாகவும் புக்கேல் அறிவித்துள்ளார்.

அதற்காக அவர் கடந்த ஒரு வார காலமாகவே பிட்காயினுக்கு இங்கு வரிகள் விதிப்பட்டாது என விளம்பரங்களில் ஈடுபட்டு அனைத்து முதலீட்டாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த விளம்பரப் பிரச்சாரத்தின் முடிவில் லா யூனியன் பகுதியின் (La Union) கிழக்கு மாகாணத்தில் உள்ள எரிமலையிலிருந்து எடுக்கப்படும் புவிவெப்ப ஆற்றலுக்கு மட்டுமே மதிப்புக் கூட்டு வரிகள்(VAT) விதிக்கப்படும் எனவும், அதனைத் தவிர்த்து எந்தவித வரிகளும் பிட்காயினுக்கு விதிக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

கிரிப்டோ லேட்டஸ்ட் அப்டேட்: டாப் லிஸ்ட்டில் ஷி சூ காயின்!
அதுமட்டுமின்றி ”இங்கு பிட்காயினில் முதலீடு செய்து, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நீங்கள் சம்பாதிக்கலாம்; அவை அனைத்தும் வரிகள் அற்றவையே” எனவும் அதிரடியாக அறிவித்துள்ளார். புக்கேலின் இந்த அறிவிப்பால் உலகின் பல நாடுகளின் கவனம் புக்கேல் மீது திரும்பியுள்ளது. எல் சால்வடாரில் வரும் 2022ஆம் ஆண்டில் பிட்காயினுக்கான ஆரம்ப விற்பனைப் பத்திரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் புக்கேல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *