பிஎம் கிசான்: பணம் வரலனா என்ன செய்வீங்க?

by -20 views

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒரு தவணைக்கு ரூ.2000 என மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தமாக 9 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக, 10ஆவது தவணைப் பணம் எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில், அதுகுறித்த தகவல் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியது.

டிசம்பர் மாத மத்தியில் விவசாயிகளுக்கு 10ஆவது தவணைப் பணம் வழங்கப்படும் எனவும், இதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை பிஎம் கிசான் திட்டத்தில் நிதியுதவி வராவிட்டால் என்ன செய்வது?

அரசு தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, தகுதியுடைய விவசாயிகளுக்கு நிதியுதவி வராவிட்டால் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக டோல் ஃபிரீ நம்பர்களும் உள்ளன. அதில் விவசாயிகள் புகார் கொடுக்கலாம்.

விவசாயிகளுக்கு 2000 ரூபாய்… இந்தத் தேதியில் கிடைக்கும்!
பிஎம் கிசான் டோல் ஃபிரீ நம்பர்: 18001155266

பிஎம் கிசான் ஹெல்ப்லைன் நம்பர்: 155261

லேண்ட் லைன் நம்பர்கள்: 011—23381092, 23382401

பிஎம் கிசான் நியூ ஹெல்ப்லைன்: 011-24300606

மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109

பிஎம் கிசான் நிதியுதவி விஷயத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆதார், மொபைல் நம்பர், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தவறாக இருந்தாலும் நிதியுதவி வந்துசேராது. எனவே இந்த விவரங்களையும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *