பான் கார்டு மிஸ் ஆகிடுச்சா? கவலை வேண்டாம்… ஈசியா எடுக்கலாம்!

by -30 views

ஆதார் கார்டு போலவே பான் கார்டும் மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சொல்லப்போனால் பணப் பரிவர்த்தனைகள், வருமான வரி போன்ற பணம் தொடர்பான விஷயங்களில் பான் கார்டு கட்டாயமான ஆவணமாக இருக்கிறது. பான் கார்டை ஆதாருடன் இணைக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட மிக முக்கியமான ஆவணமாக உள்ள பான் கார்டு தொலைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? கவலைப்பட வேண்டாம்.

ஆன்லைன் மூலமாக இ-பான் கார்டு டவுன்லோடு செய்து எடுத்துக்கொள்ளலாம். வருமான வரித் துறையின் புதிய வெப்சைட்டில் இதற்கான வசதி இருக்கிறது.

https://www.incometax.gov.in/iec/foportal என்ற வெப்சைட்டில் லாகிங் செய்து ‘Instant E PAN’ என்பதை கிளிக் செய்யவும்.

அதன் பிறகு, ‘New E PAN’ என்பதை கிளிக் செய்து உங்களது பான் எண்ணைப் பதிவிட வேண்டும்.

ஒருவேளை உங்களது பான் எண் ஞாபகம் இல்லாவிட்டால் ஆதார் எண்ணைப் பதிவிடலாம்.

நிறைய டேர்ம்ஸ் & கண்டிசன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை எல்லாம் படித்துப் பார்த்து ‘accept’ கொடுக்க வேண்டும்.

இப்போது உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும். அதைப் பதிவிட்டு ’confirm’ கொடுக்க வேண்டும்.

உங்களது இ-பான் கார்டு இப்போது உங்களது இ-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். அதை நீங்கள் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *