பான் கார்டு எச்சரிக்கை… இதைச் செய்தால் ரூ.10,000 அபராதம்!

by -21 views

பணப் பரிவர்த்தனை மற்றும் வருமான வரி தொடர்பான விஷயங்களில் தனிநபரின் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டுகளுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பதற்குக் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பலர் அவற்றை இணைக்காமலேயே உள்ளனர். பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழந்துவிடும் என்பதோடு, அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

பான் கார்டு நம்பரை தவறாக வழங்கினால் வருமான வரிச் சட்டத்தின் படி ரூ.10,000 வரையில் அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, ஒரு நபர் ஒரேயொரு பான் பார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கார்டு வைத்திருந்தால் பிரச்சினைதான். உங்களிடம் டூப்ளிகேட் பான் கார்டு இருந்தால், அது கண்டுபிடிக்கப்பட்டால் ஒரிஜினல் பான் கார்டும் ரத்து செய்யப்பட்டுவிடும். அதோடு, மிகப் பெரிய அளவில் அபராதமும் விதிக்கப்படும். எனவே டூப்ளிகேட் பான் கார்டு இருந்தால் அதை சரண்டர் செய்வது நல்லது.

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… சம்பள உயர்வு!!
பொதுவாக, பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது அது சரியான நேரத்தில் வந்துசேராவிட்டால், அதில் ஏதோ பிரச்சினை இருப்பதாக நினைத்து இன்னொரு பான் கார்டுக்கு விண்ணப்பித்துவிடுகின்றனர். இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வந்துவிடுகிறது. பான் கார்டுக்கு விண்ணப்பித்து அது கையில் வந்து சேருவதற்கு அதிக காலம் எடுக்கிறது. அதற்குள் அவரசப்பட்டு ஒன்னொரு கார்டுக்கு விண்ணப்பித்தால் சிக்கல் ஏற்படும். வருமான வரிச் சட்டம் 272பி-இன் படி இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டும்.

பான் கார்டை சரண்டர் செய்வதற்கு வருமான வரித் துறை வெப்சைட்டிலேயே விண்ணப்பம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *