’பாத்து சூதானமா பணம் எடுங்கப்பா’… எஸ்பிஐ எச்சரிக்கை!

by -44 views

வங்கித் துறையில் நிதி மோசடிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தினமும் தங்களது பணத்தை வெவ்வேறு வழிகளில் ஆன்லைன் மோசடி மூலமாகவும், நிதி மோசடி மூலமாகவும் இழந்து வருகின்றனர். வங்கிகள் தரப்பிலிருந்து எவ்வளவுதான் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வந்தாலும் இதுபோன்ற மோசடிகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இந்த விஷயத்தில் மீண்டும் ஒரு முறை எச்சரிக்கை செய்துள்ளது.

ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது வாடிக்கையாளர்கள் ஓடிபி முறையை சரியாகக் கையாளும்படி கேட்டுக்கொண்டுள்ளது. சென்ற ஆண்டின் ஜனவரி மாதத்திலேயே ஏடிஎம் ஓடிபி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கிலிருந்து 10,000 ரூபாய்க்கு மேல் ஏடிஎம் வாயிலாக வித்டிரா செய்தால் அவர்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓபிடி அனுப்பப்படும். அதைப் பதிவுசெய்த பின்னர் பணத்தை எடுக்க வேண்டும்.

Gold Price: தங்கம் வாங்க நல்ல நேரம்… உடனே கிளம்புங்க!!

இதன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. SMS, ஈமெயில் மூலமாக தெரியாத நபர்களிடமிருந்து கேஒய்சி தொடர்பாக தனிநபர் தகவல்கள் கேட்கப்பட்டால் கொடுக்கக் கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *