பயிர் காப்பீடு: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

by -43 views

பாரத பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டு திட்டத்தில் ராபி பருவ வேளாண் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாசிப் பயிறு மற்றும் உளுந்து பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகிற நவம்பர் 15ஆம் தேதி கடைசி நாளாகும். இன்னும் சில நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளதால் விவசாயிகள் அதற்குள் காப்பீடு செய்தால் பயன் கிடைக்கும்.

காப்பீட்டு செய்வதற்கு ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், அடங்கல் பட்டா ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பொதுச் சேவை மையங்களுக்குச் சென்று விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பீடு செய்துகொள்ளலாம். பாசிப் பயறுக்கான காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.13,265. இதற்கு பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.199.

அதேபோல, உளுந்து பயிருக்கான காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.13,265 மற்றும் பிரீமியம் தொகை ரூ.199. இவையிரண்டு பயிர்களுக்கும் காப்பீடு செய்ய நவம்பர் 15தான் கடைசி நாள்.

இதைத் தொடர்ந்து மக்காச்சோளம், கம்பு, ராகி, துவரை, பருத்தி ஆகிய பயிர்களுக்கான காப்பீட்டு கால வரம்பு நவம்பர் 30ஆம் தேதியாகும். டிசம்பர் 15ஆம் தேதி சோளம் பயிருக்கும், டிசம்பர் 30ஆம் தேதி நிலக்கடலை மற்றும் சூரிய காந்திக்கும் அவகாசம் முடிவடைகிறது. 2022 ஜனவரி 31ஆம் தேதி வரை எள் பயிருக்கும், பிப்ரவரி 28ஆம் தேதி வரை நெல் பயிருக்கும், ஆகஸ்ட் 31 வரை கரும்பு பயிருக்கும் அவகாசம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *