பண்டிகை செய்த காரியம்: விமானத்தில் பறந்த 3 லட்சம் பேர்!

by -30 views

தசரா மற்றும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நிறையப் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். கொரோனா பாதிப்புகளைத் தாண்டி விமானப் போக்குவரத்துச் சேவை தொடங்கிய பிறகு தற்போது நிறையப் பேர் விமானப் பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக தீபாவளிக்கு முந்தைய வாரத்தில் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்ட விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது. அக்டோபர் 30ஆம் தேதியில் மட்டும் ஒரே நாளில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3.38 லட்சமாக அதிகரித்துள்ளது.

2,500க்கும் மேற்பட்ட விமானங்களில் இவர்கள் பயணம் செய்துள்ளனர். 2020 மார்ச் 23ஆம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு அதிகமான பயணிகள் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல் முறை. அக்டோபர் மாதத்தில் மட்டும் ஆறு நாட்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இவையனைத்தும் வார இறுதி நாட்களாகும். அக்டோபர் 18ஆம் தேதியில் மட்டும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தொடவில்லை.

5 ரூபாய் நாணயத்துக்கு ரூ.5 லட்சம் கிடைக்கும்!!
அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்ற நாட்களை விடக் குறைவாகவே இருந்துள்ளது. இதனால் நிறையப் பேர் பண்டிகை சமயத்தில் நெரிசலில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக செவ்வாய்க் கிழமைகளில் சொந்த ஊர்களுக்குச் சென்ற முயன்றனர். அக்டோபர் 26ஆம் தேதி செவ்வாய்க் கிழமையில் 2.56 லட்சம் பேர் விமானப் பயணம் மேற்கொண்டனர். மற்ற செவ்வாய்க் கிழமைகளில் இதை விட மிகவும் குறைவுதான்.

அக்டோபர் 25ஆம் தேதி 2.84 லட்சம் பேரும், அக்டோபர் 27ஆம் தேதி 2.66 லட்சம் பேரும் உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *