பணத்தை அள்ளித் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

by -41 views
பணத்தை அள்ளித் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
பணத்தை அள்ளித் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!

வாங்கும் சம்பளத்தில் சிறு தொகையை எதிலாவது முதலீடு செய்து பெரிய லாபம் ஈட்ட நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இது தபால் நிலைய சேமிப்பு திட்டம்தான். இதில் சேமிக்கும் பணத்துக்கு உத்தரவாதம் உள்ளது. அதிக லாபமும் கிடைக்கும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, நீங்கள் மாதத்துக்கு 1000 ரூபாய் சேமித்தாலே அது பெரிய தொகையாக வந்துசேரும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் – இத்திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி கிடைக்கிறது. திட்டத்தின் முதிர்வுக் காலத்தில்தான் வட்டிப் பலன் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு இதில் நீங்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் 1000 ரூபாய் முதலீடு செய்தால் வட்டியோடு மொத்தம் ரூ.1,389.49 கிடைக்கும். இந்த விகிதத்தில் நீங்கள் சேமிக்கும் பணத்தைப் பொறுத்து வட்டி லாபமும் அதிகமாக வந்துசேரும்.

மாதம் 1 லட்சம் பென்சன்.. இளம் தலைமுறையினருக்கு இப்படியொரு திட்டம்!
எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். அருகிலுள்ள தபால் நிலையத்திலேயே நீங்கள் இத்திட்டத்தில் இணைந்து முதலீடு செய்யலாம். இணைப்புக் கணக்காகவும் திறக்கலாம். மைனர் பெயரில் அவரது பாதுகாவலர் கணக்கு தொடங்க முடியும். நீங்கள் 1000 ரூபாயில் முதலீட்டைத் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் சேமிக்கும் பணத்துக்கு வருமான வரிச் சலுகையும் கிடைப்பது கூடுதல் அம்சமாகும்.

கொரோனா போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கும்போது மக்களுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படுகிறது. அதுபோன்ற சமயங்களில் கைவசம் சேமிப்புப் பணம் இருந்தால் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே சிறு சேமிப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தலாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *