பங்குச்சந்தை சரிவு ஒரே நாளில் ரூ.4.82 லட்சம் கோடி இழப்பு

by -26 views
பங்குச்சந்தை சரிவு ஒரே நாளில் ரூ.4.82 லட்சம் கோடி இழப்பு
பங்குச்சந்தை சரிவு ஒரே நாளில் ரூ.4.82 லட்சம் கோடி இழப்பு

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவுடனேயே தொடங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் நேற்று 61,081 புள்ளிகளில் தொடங்கியது. ஆனால், வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவை நோக்கி சென்றது. அதிகபட்சமாக 59,777.58 புள்ளிகள் வரை சரிந்தது. இருப்பினும் முடிவில், முந்தைய நாள் வர்த்தகத்தை விட 1,158.63 புள்ளிகள் சரிந்து 59,984.70 புள்ளிகளில் முடிந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டியும் நேற்று காலையில் இருந்தே தொடர்ந்து சரிவை நோக்கி சென்றது.அதிகபட்சமாக 17,799.45 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தக முடிவில் முந்தைய நாளைவிட 353.7 புள்ளிகள் சரிந்தது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத பெரும் சரிவாக காணப்படுகிறது. இதன்மூலம் ஒரேநாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.82 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வந்தன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் உயர தொடங்கியது. எனினும், ஒன்றிய அரசின் சில கொள்கை முடிவுகள் பங்குச்சந்தையின் போக்கை வெகுவாக பாதித்தன. கடந்த 2020ம் ஆண்டில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் சுமார் 7 முறைகடும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி 3,934.72 புள்ளிகள் சரிந்தது, 2008 அக்டோபருக்கு பிறகு ஏற்பட்ட கடும் சரிவாக இது காணப்பட்டது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி சென்செக்ஸ் 1,708 புள்ளிகள் சரிந்திருந்தது. இதன்பிறகு நேற்று பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இது, முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *