நோட்டு கிழிந்தாலும் பணம் கிடைக்கும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

by -45 views

நமது அன்றாடம் வாழ்வில் நிறைய ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் அடிக்கடி கைமாறுகின்றன. சில நேரங்களில் நாம் வாங்கும் நோட்டுகளை அவசரத்தில் சரியாகக் கவனிக்க மறந்துவிடுவோம். இன்னொரு இடத்தில் அதைக் கொடுக்கும்போது வாங்கமாட்டார்கள். காரணம், அது கிழிந்து போயிருக்கும். இப்படி நமக்கே தெரியாமல் கிழிந்து நோட்டுகள் நம்மிடம் வந்துவிடும். சிலருக்கு ஏடிஎம் மெஷின்களிலேயே கிழிந்த நோட்டுகள் வரும்.

பொதுவாகவே ஏடிஎம் மெஷின்களில் வைக்கப்படும் ரூபாய் நோட்டும் சரியானதாகவே இருக்கும். கிழிந்த, கசங்கிய நோட்டுகள் இருக்காது. ஆனால், சில நேரங்களில் மெஷின்களுக்கு உள்ளேயே சிக்கி நோட்டுகள் கிழிந்துவிடும். அதை வெளியே எடுக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு கிழிந்த நோட்டுகளாக வரும். அப்படி ஏடிஎம் மெஷினில் பணம் வித்டிரா செய்யும்போது உங்களுக்கு கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டு வந்தால் என்ன செய்வீர்கள்? கவலைப்படத் தேவையில்லை!

அந்த நோட்டுக்குப் பதிலாக உங்களுக்கு அதே மதிப்பில் புதிய நோட்டுகள் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட வங்கியிலேயே நீங்கள் அதை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு வங்கிக் கிளைக்குச் சென்று நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணம் எடுத்த தேதி, நேரம், ஏடிஎம் கிளை போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதனுடன் நீங்கள் பணம் எடுத்த ரசீதையும் இணைக்க வேண்டும். ஒருவேளை ரசீது வராவிட்டால் பணம் எடுத்தவுடன் மொபைல் நம்பருக்கு வந்த SMS விவரத்தை வழங்க வேண்டும்.

இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் சென்று பார்க்கலாம்.

www.rbi.org.in -> Publications -> Occasional

கிழிந்த நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. வங்கிகள் இந்த நோட்டுகளை கட்டாயம் மாற்றித் தரவேண்டும். அதுதான் விதிமுறை. அவ்வாறு வங்கிகள் கிழிந்த நோட்டுகளை வாங்க மறுத்தால் அதுகுறித்து புகார் அளிக்கலாம். ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து அந்த வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் இந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, உங்களிடம் உள்ள கிழிந்த நோட்டு சிறிய அளவில் கிழிந்திருந்தால் அதே மதிப்புக்கு வேறு நோட்டு மாற்றித் தரப்படும். ஆனால், முழுவதுமாகக் கிழிந்திருந்தால் அதில் குறிப்பிட்ட ஒரு மதிப்புக்கு மட்டுமே மாற்றித் தரப்படும். அதேநேரம், ரூ.1 முதல் ரூ.20 வரையிலான நோட்டுகள் எந்த அளவுக்குக் கிழிந்து இருந்தாலும் அவற்றின் முழு மதிப்புக்கும் வேறு நோட்டுகள் மாற்றி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *