நெல்லையில் வரி கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்: கேரளாவுக்கு மூட்டை, மூட்டையாக செல்கிறது

by -22 views
நெல்லையில் வரி கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்: கேரளாவுக்கு மூட்டை, மூட்டையாக செல்கிறது
நெல்லையில் வரி கத்தரிக்காய் விளைச்சல் அமோகம்: கேரளாவுக்கு மூட்டை, மூட்டையாக செல்கிறது

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டு கத்தரிக்காய் எனப்படும் வெள்ளை கத்தரிக்காய் விளைச்சல் அதிகமாக இருக்கும். வரி கத்தரிக்காய்கள் வெளிமாவட்டங்களில் இருந்தே நெல்லை மாவட்டத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நெல்லை சுற்றுவட்டாரங்களில் தற்போது வரி கத்தரிக்காய்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. பாளை. அரியகுளம் பகுதியில் வரி கத்தரிக்காய்களை விளைவித்து வரும் விவசாயிகள், நல்ல விளைச்சல் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.30க்கு விவசாயிகளிடம் இருந்து பெறப்படுகிறது.

70 கிலோ கத்தரிக்காய்களை சாக்கில் கட்டி கேரளாவுக்கு மூடை, மூடையாக அனுப்பி வருகின்றனர்.  வியாபாரிகள் ஒரு கிலோ வரி கத்தரிக்காயை ரூ.35 முதல் ரூ.40க்கு விற்பனை செய்து வருகின்றனர். வரி கத்தரிக்காய்களுக்கு நல்ல விலை இருப்பதால் விவசாயிகளும் மகிழ்ச்சியோடு விளைவித்து வருகின்றனர். நெல்லையில் நாட்டு கத்தரிக்காய்களுக்கு இணையாக வரி கத்தரிக்காய்களும் நல்ல விளைச்சல் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *