நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்… இப்படி சேமித்தால் போதும்!

by -33 views

அனைவருக்குமே விரைவில் பணக்காரர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். உண்மையில் அது கஷ்டமான விஷயம்தான். ஆனால் சரியான திட்டத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்தால் அந்த இலக்கை அடைந்துவிடலாம். அதற்கான நிறைய சேமிப்புத் திட்டங்கள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. இதில் முக்கியமான ஒரு திட்டம்தான் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) திட்டம்.

பிபிஎஃப் திட்டம் நீண்ட கால அடிப்படையில் அதிக லாபம் தரும் சேமிப்புத் திட்டமாகும். பிபிஎஃப் கணக்கில் ஒரு வருடத்துக்கு நீங்கள் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அதாவது மாதத்துக்கு ரூ.12,500. நீங்கள் முதலீடு செய்யும் தொகை மற்றும் முதலீடு செய்யும் அதிகபட்ச காலம் ஆகியவற்றைப் பொறுத்து உங்களுக்கு அதிக லாபம் இதில் கிடைக்கும்.

பிபிஎஃப் திட்டத்தில் இப்போது 7.1 சதவீத வட்டி கிடைக்கிறது. 15 ஆண்டுகளுக்கு இதில் முதலீடு செய்யலாம். மாதத்துக்கு ரூ.12,500 என முதலீடு செய்தால் 15 ஆண்டுகளில் உங்களுக்குக் கிடைக்கும் தொகை ரூ.40,68,209. நீங்கள் முதலீடு செய்தது ரூ.22.4 லட்சம். வட்டி லாபம் ரூ.18,18,209.

15 ஆண்டுகள் முதிர்வு காலம் தாண்டி ஐந்து ஐந்து ஆண்டுகளுக்கு முதலீட்டை நீடித்தால் உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கும்.

உதாரணமாக, உங்களுக்கு இப்போது 30 வயது என்று வைத்துக்கொள்வோம். 15 ஆண்டுகள் தாண்டி மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் மொத்தம் 25 ஆண்டுகளில் உங்களுக்கு மொத்தம் ரூ.1,03,08,015 கிடைக்கும். இவ்வாறாக, உங்களுடைய 55ஆவது வயதில் உங்கள் கையில் ஒரு கோடி ரூபாய் இருக்கும்.

முதலீடு செய்யும் தொகை மற்றும் கால அளவைப் பொறுத்து நீங்கள் இத்திட்டத்தில் அதிக லாபம் ஈட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *