நிலக்கரி தட்டுப்பாடு: எல்லாம் சரியாத்தான் இருக்கு!

by -30 views

இந்தியாவில் இப்போது நிலக்கரி தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சினையாக எழுந்துள்ளது. மின் விநியோகக் குறைபாட்டுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ள இந்த நிலக்கரி பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் தற்போது போதுமான அளவில் நிலக்கரி இருப்பில் இருப்பதாக கோல் இந்தியா நிறுவனத் தலைவர் பிரமோத் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியா டுடே ஊடகத்திடம் இதுகுறித்துப் பேசிய அவர், கடந்த ஏழு – எட்டு நாட்களில் நிலைமை சீராகியுள்ளதாகவும், கோல் இந்தியா நிறுவனத்திடம் நிலக்கரி இருப்பு மேம்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நிலக்கரித் தட்டுப்பாடு பெரிய அளவில் இருந்தது. இந்த மாதங்களில் வழக்கமாக உற்பத்தியை விட நுகர்வு அதிகமாக இருக்கும். அதைச் சரிசெய்ய நிலக்கரி இருப்பு அதிகமாக இருப்பது அவசியம். ஆனால் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக மழைப்பொழிவு அதிகக் காலம் நீடித்ததால் நிலக்கரி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தியைப் பொறுத்தவரையில் அனல்மின் நிலையங்கள் வாயிலாக 2.7 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு 18.5 லட்சம் டன் வரையில் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 20 லட்சம் டன் வரையில் தற்போது சப்ளை செய்யப்படுவதாக கோல் இந்தியா நிறுவனத் தலைவர் கூறுகிறார். அடுத்து வரும் நாட்களில் தேவை குறைந்து விநியோகம் அதிகரிக்கும் எனவும், இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது: மத்திய அரசு நம்பிக்கை!
கோல் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரையில், அதனிடம் 40 மில்லியன் டன் அளவு நிலக்கரி ஸ்டாக் இருப்பதாகவும், அது அடுத்த 24 நாட்கள் வரையில் தேவைக்கு இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு தினமும் 20 லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்யப்படுகிறது. அதில் சுமார் 16.25 லட்சம் டன் நிலக்கரி கோல் இந்தியா நிறுவனத்திடமிருந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *