நவ.1-ம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடக்கம்; சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

by -42 views

சென்னை: 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்க உள்ளது. ஏற்கனவே கடந்த செப். 1-ம் தேதி, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றது.

அதன் அடிப்படையில் வரும் நவ.1-ம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவ.1-ம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகுப்பில் அதிகபட்சமாக 20 மாணவர்கள் மட்டுமே தனி மனித இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள் என்றும் சத்துணவு திட்டம் தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் யாரும் கட்டாயத்தின் அடிப்படையில் வர அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வர விருப்பமில்லாத மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சியின் மூலமாகவும் பாடங்களை படித்துக்கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *