நகை வாங்குவோருக்கு இனிப்பான செய்தி!

by -29 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக, தங்கம் விலை மாலையில் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 4) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,382 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.4,373 ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 35,056 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 72 ரூபாய் குறைந்து 34,984 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,746 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,737 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 38,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 76 ரூபாய் குறைந்து 37,896 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.64.80 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.64.50 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *