நகைக் கடன் – கார் லோன் சலுகை… பணத்தை அள்ளிக் கொடுக்கும் எஸ்பிஐ!

by -28 views

ஒவ்வொரு ஆண்டும் தசரா, தீபாவளி பண்டிகைக் காலங்களில் வங்கிகள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்குக் கட்டுக் கட்டான சலுகைகளை அறிவித்துள்ளது. வாகனக் கடன், வீட்டுக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல், செயல்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட கூடுதல் கட்டணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாக, பல்வேறு கடன்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறும்படி வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. எஸ்பிஐ சிறப்புச் சலுகையின் கீழ் கார் லோன் பெறுபவர்கள் ஒரு லட்ச ரூபாய்க்கு ரூ.1,539 வரை சலுகை பெறலாம். அதேபோல, தனிநபர் கடனுக்கு ரூ.1,832 சலுகை கிடைக்கும். தங்க நகைகளுக்கு 7.5 சதவீத வட்டியில் வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம்.

அக்.1 முதல் புது ரூல்ஸ்! இனி நமக்கே தெரியாமல் பணம் போகாது!
எஸ்பிஐ யோனோ ஆப் மூலமாகவோ அல்லது www.sbiyono.sbi என்ற வெப்சைட் மூலமாகவோ விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகைகள் கிடைக்கும். சில தினங்களுக்கு முன்னர்தான் வீட்டுக் கடன் சலுகை தொடர்பான அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக் கடன் போன்றவற்றுக்கான சலுகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. வீட்டுக் கடன் சலுகையைப் பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *