தபால் அலுவலகத்தில் புதிய சேவை.. இனி இதுவும் கிடைக்கும்!

by -24 views

ஹைலைட்ஸ்:

  • தபால் அலுவலகத்தில் சுகாதாரக் காப்பீடு சேவை
  • மோட்டார் காப்பீட்டு சேவைகளும் கிடைக்கும்

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (IPPB) பல்வேறு நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு இந்தியா பேமண்ட்ஸ் வங்கி புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, இனி இந்தியா பேமண்ட்ஸ் வங்கியில் சுகாதாரக் காப்பீடு மற்றும் மோட்டார் காப்பீடு வாங்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி ட்விட்டரில், “தீபாவளி என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல; வளர்ச்சிக்கான புதிய தொடக்கமும் கூட.

தபால் அலுவலகங்கள் வாயிலாக வீட்டுக்கே நேரடியாக சுகாதார மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் சேவைகளை வழங்கும் புதிய திட்டத்தை இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி அறிமுகப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது. காகித வாயிலான விண்ணப்பங்கள் ஏதுமில்லாமல் உடனடியாக இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இன்று முதல் 5 நாட்களுக்கு லீவு.. முக்கிய அலர்ட்!
இதன் மூலம், நாடு முழுவதும் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் தபால் அலுவலகங்கள் வாயிலாக சுகாதாரக் காப்பீடு மற்றும் மோட்டார் காப்பீடு சேவைகளை வாங்கிக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

1. காகித விண்ணப்பங்கள் இல்லை.

2. வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும்.

3. உடனடியாக பெற்றுக்கொள்ளலாம்.

4. கார் இன்சூரன்ஸில் இயற்கை சீற்றங்களுக்கான கவரேஜும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *