தபால் அலுவலகத்தில் இவ்வளவு சேவைகளா? உங்களுக்கே தெரியாத தகவல்கள்!

by -21 views

ஹைலைட்ஸ்:

  • தபால் அலுவலகத்தில் கிடைக்கும் சேவைகள்
  • சாமானிய மக்களுக்கான முழு பட்டியல்

இந்தியாவில் தபால் அலுவலகங்களும், தபால் துறை சேவைகளும் நகரப்புறங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை பரவிக் கிடக்கின்றன. இதனால் கடைகோடி கிராமங்களில் இருப்போருல் தபால் அலுவலகங்களில் சேவை பெற முடிகிறது. இதனாலேயே தபால் அலுவகங்கள் வாயிலாக பல்வேறு புதுப்புது சேவைகள் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசின் பல்வேறு சேவைகள் தபால் அலுவலகங்கள் வாயிலாகக் கிடைக்கின்றன. பான் கார்டு விண்ணப்பம், வருமான வரித் தாக்கல், கொரோனா தடுப்பூசி புக்கிங் என பலதரப்பட்ட சேவைகளை தபால் அலுவலகங்களில் பெறலாம்.

தொழில்நுட்பம் குறித்து முழு புரிதல் இல்லாதவர்களுக்கும் தபால் அலுவலகம் வாயிலாக ஈசியாக சேவைகள் சென்று சேருகிறது. தபால் அலுவலகங்களில் என்னென்ன சேவைகள் கிடைக்கிறது? இதுகுறித்து இந்திய தபால் துறை ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளது.

ரூ. 500 முதலீட்டில் பென்சன்.. போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
* வருமான வரித் தாக்கல்

* கொரோனா தடுப்பூசி புக்கிங்

* பான் கார்டு விண்ணப்பம்

* வாக்காளர் அட்டை விண்ணப்பம்

* பாஸ்போர்ட் விண்ணப்பம்

* பிரதமர் ஃபசல் பீமா யோஜனா விண்ணப்பம்

* ஃபாஸ்டேக் (Fastag) ரீச்சார்ஜ்

* பில் கட்டணம்

* ஜீவன் பிரமாணப் பத்திரம் தாக்கல்

இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கும் தபால் அலுவலகங்கள் வாயிலாக இச்சேவைகள் அனைத்தையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *