தங்கம் விலை சவரனுக்கு ₹152 குறைந்தது

by -40 views
தங்கம் விலை சவரனுக்கு ₹152 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ₹152 குறைந்தது

சென்னை: தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், தங்கம் சவரனுக்கு ₹152 குறைந்து விற்பனையானது. தீபாவளி சமயத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை, தீபாவளி முடிந்த பிறகும் உயர்ந்தபடி இருந்தது. கடந்த 13ம் தேதி கிராமுக்கு ₹33 அதிகரித்து ஒரு கிராம் ₹4,655க்கும், சவரனுக்கு ₹264 அதிகரித்து ஒரு சவரன் ₹37,240க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ₹37 ஆயிரத்தை தாண்டியது.14ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும்.

அதனால், சனிக்கிழமை விலையிலேயே ஞாயிற்றுக்கிழமை தங்கம் விற்பனையானது. ஒருநாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ₹19 குறைந்து ஒரு கிராம் ₹4,636க்கும், சவரனுக்கு ₹152 குறைந்து ஒரு சவரன் ₹37,088க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை திடீரென குறைந்துள்ளது நகை வாங்குவோரிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *