தங்கம் விலை: காலையில் உயர்வு… மாலையில் சரிவு!

by -31 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று காலையிலும் விலையேற்றம் இருந்தது. இந்நிலையில் மகிழ்ச்சிதரும் விதமாக, தற்போது மாலை நேரத்தில் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 7) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,411 ஆக இருந்தது. மாலையில் அது 4,408 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 35,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 24 ரூபாய் குறைந்து 35,264 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Gold rate: விலைய கேட்டா நெஞ்சு வலியே வந்திடும்!

தூய தங்கத்தின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,775 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,772 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 38,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 24 ரூபாய் குறைந்து 38,176 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.65.20 ஆக இருந்தது. மாலையில் அது 65.40 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *