தங்கம் விலை ஒரு வழியா குறைஞ்சிருச்சு!

by -28 views

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்தில் உள்ளனர். இன்று காலையில்கூட தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறிதளவு விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 26) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,538 ஆக இருந்தது. மாலையில் அது 4,536 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, இன்று காலை 36,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 16 ரூபாய் குறைந்து 36,288 ரூபாய்க்கு வந்துள்ளது.

Gold rate: தீபாவளிக்குக் கூட லீவு இல்லையா தங்கமே?

தூய தங்கத்தின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,902 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,900 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 39,216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 16 ரூபாய் குறைந்து 39,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.70.20 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.70 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *