தங்கம் வாங்கணுமா? வெறும் 100 ரூபாய் இருந்தா போதும்!

by -26 views

தங்கம் விற்கும் விலைக்கு ஒரு கிராம் வாங்குவதே பெரும் சிரமமாக இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தங்கம் விலை உயர்ந்தாலும் அதை வாங்குவதற்கு எப்போதுமே கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த அளவுக்கு தங்கம் விலை மதிப்பு மிக்க, அந்தஸ்துடைய பொருளாக உள்ளது. இதுமட்டுமல்லாமல், தங்கம் என்பது மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாகும். இப்போது வாங்கி வைத்தால் எதிர்காலத்தில் பெரிய லாபம் கிடைக்கும். இதற்காகவே தங்கத்தை வாங்குபவர்கள் அதிகம்.

ஆனால் தங்கம் விலை அதிகமாக இருப்பதால் அதை வாங்குவது சிரமமாக உள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை 4474 ரூபாயாக உள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும். தங்கம் வாங்கலாம். ஆனால் இது டிஜிட்டல் தங்கம். இப்போதெல்லாம் பேடிஎம், போன் பே உள்ளிட்ட மொபைல் ஆப்களிலேயே டிஜிட்டல் தங்கம் வாங்கும் திட்டங்கள் நிறைய வந்துவிட்டன. இதில் நல்ல லாபமும் கிடைக்கிறது.

Gold rate: இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை!

பண்டிகை சீசனை முன்னிட்டு டிஜிட்டல் தங்கம் விற்பனையை தனிஷ்க் நிறுவனமும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனமும் தொடங்கியுள்ளன. இதில் வாடிக்கையாளர்கள் 100 ரூபாய் தொடங்கி தங்கம் வாங்கலாம். இந்த நிறுவனங்களின் வெப்சைட் அல்லது மொபைல் ஆப்களில் சென்று இந்த தங்கத்தை வாங்க முடியும். இது டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டமாகும். குறைந்தது ஒரு கிராம் மதிப்புக்கு தங்கம் வாங்கினால் அது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும். இத்திட்டம் வாடிக்கையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *