தங்கம் சவரனுக்கு 80 அதிகரிப்பு

by -55 views
தங்கம் சவரனுக்கு 80 அதிகரிப்பு
தங்கம் சவரனுக்கு 80 அதிகரிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி சமயத்தில் நகை வாங்குவதை பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்தது. கடந்த 5ம் தேதி சவரன் 36,224க்கும், 26ம் தேதி 36,288 என்றும் விலை உயர்ந்து காணப்பட்டது. 27ம் தேதி சவரன் 288 குறைந்து ஒரு சவரன் 36,000க்கு விற்கப்பட்டது. 28ம் தேதி தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 176 அதிகரித்து ஒரு சவரன் 36,176க்கு விற்கப்பட்டது.இந்நிலையில், 29ம் தேதி தங்கம் சவரனுக்கு 112, 30ம் தேதி சவரன் 16 என்றும் விலை குறைந்தது.

31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கிராமுக்கு 13 குறைந்து ஒரு கிராம் 4,493க்கும், சவரனுக்கு 104 குறைந்து ஒரு சவரன் 35,944க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களில் சவரன் 232க்கு குறைந்தது. தங்கம் விலை குறைந்து வந்தது தீபாவளிக்கு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று காலையில் விலை திடீரென உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 15 அதிகரித்து ஒரு கிராம் 4,508க்கும், சவரனுக்கு 120 அதிகரித்து ஒரு சவரன் 36,064க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை சற்று குறைந்தது. அதே நேரத்தில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு 10 அதிகரித்து ஒரு கிராம் 4,503க்கும், சவரனுக்கு 80 அதிகரித்து ஒரு சவரன் 36,024க்கும் விற்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *