தங்கத்தை பணமாக்கும் திட்டம்: வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!

by -50 views
தங்கத்தை பணமாக்கும் திட்டம்: வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!
தங்கத்தை பணமாக்கும் திட்டம்: வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்!

கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து நீங்கள் உங்கள் வேலையை இழந்துவிட்டீர்களா? உங்களுக்குக் கடுமையான நிதி நெருக்கடி உள்ளதா? கவலை வேண்டாம்! உங்கள் வீட்டில் தங்கம் இருந்தாலே போதும். பணம் உங்களைத் தேடி வரும். இது உங்களிடம் உள்ள தங்கத்தை அடகு வைத்து பணம் புரட்டுவது கிடையாது. அதற்கு மாறாக, உங்கள் தங்கத்துக்கு வங்கியே உங்களுக்கு வட்டி வழங்கும்.

அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. அதுதான் தங்கத்தைப் பணமாக்கும் திட்டம். உங்களிடம் தங்க நாணயங்கள், நகைகள் இருந்தால் அவற்றை வங்கியில் டெபாசிட் செய்து அதிகப்படியான வட்டி விகிதத்தைப் பெறலாம். வீட்டிலிருந்தே சம்பாதிக்க இதுவொரு நல்ல வாய்ப்பாகும். எந்தவொரு இந்தியக் குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

கேப் விடாமல் வெளுத்து வாங்கும் விலை!
நீங்கள் குறைந்தபட்சம் 10 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். அதற்கு அதிக வட்டி லாபம் கிடைக்கும். 1 முதல் 3 ஆண்டுகள், 5 முதல் 7 ஆண்டுகள், 12 முதல் 15 ஆண்டுகள் என வெவ்வேறு வரம்புகளில் டெபாசிட் செய்யலாம்.

ஒரு வருட டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 0.50 சதவீத வட்டி கிடைக்கும். 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 0.60 சதவீத வட்டியும், 2 முதல் 3 ஆண்டுகளுக்கு 0.75 சதவீத வட்டியும் கிடைக்கும். 5 முதல் 7 ஆண்டுகளுக்கான வட்டி 2.25 சதவீதம். அதேபோல, 12 முதல் 15 ஆண்டுகளுக்கான வட்டி 2.50 சதவீதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *