தங்கத்தை இப்படி வைத்து சம்பாதிக்கலாம்!

by -24 views

வசதியைப் பொறுத்து அனைவரது வீட்டிலும் தங்கம் வாங்கி வைக்கப்படுகிறது. தங்கம் என்பது மதிப்பு மிக்க அழகு சாதனப் பொருள் மட்டுமல்ல; அதுவொரு மிகச் சிறந்த முதலீட்டுப் பொருளாகும். தங்கத்தை வைத்து அவசர காலங்கள் நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியும். தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதை வாங்கி வைத்தால் பின்னாட்களில் பெரிய தொகை கிடைக்கும். தங்கத்தை அடகு வைப்பது நல்ல முடிவாக இருக்காது என்று பலர் நினைப்பார்கள். ஆனால், தங்கத்தை டெபாசிட் செய்யும் திட்டத்தில் வைத்தால் அதிகப் பயன் கிடைக்கும். இது முற்றிலும் மாறுபட்ட திட்டமாகும்.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தங்கம் புதுப்பிக்கப்பட்ட தங்க வைப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை டெபாசிட் செய்யலாம். அது தங்கக் கட்டிகளாகவோ, நாணயங்களாகவோ அல்லது நகைகளாகவோ இருக்கலாம். கற்கள் மற்றும் இதர உலோகங்கள் இல்லாத தங்கத்தை இத்திட்டத்தின் கீழ் வைக்க முடியும். இதற்கு வட்டி லாபமும் வங்கி தரப்பிலிருந்து வழங்கப்படும். தங்கமும் பாதுகாப்பாக இருக்கும்.

Gold rate: நகை வாங்குறது கஷ்டம்… அதிரடி உயர்வு!

குறைந்தபட்சம் 10 கிராம் தங்கத்தை இத்திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. வட்டி லாபத்தைப் பொறுத்தவரையில், ஒரு ஆண்டுக்கு 0.50 சதவீத வட்டி கிடைக்கும். 1 முதல் 2 ஆண்டுகளுக்கு 0.55 சதவீத வட்டியும், 2 முதல் 3 ஆண்டுகளுக்கு 0.60 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *